இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் 22 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சுமார் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக காஜியண்டெப் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று இரவு 10.50 மணியளவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்திற்கு துருக்கி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் அமைப்பிற்கான அரபு நாட்டு பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆளும் நீதி மற்றும் வளர்ச்சி கட்சியின் காஜியண்டெப் நகர எம்.பி தெரிவித்தார்