துருக்கியில் மூத்த அதிகாரிகள் மூவர் கைது

துருக்கியில் கடந்த மாதம் 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர். ஆனால் அதிபர் எர்டோகன், பொதுமக்களின் துணையுடன் இந்த புரட்சி முயற்சியை தோற்கடித்தார். இருப்பினும் இந்த புரட்சி முயற்சியின்போது நடந்த மோதல்களில் 179 பேர் உயிரிழந்தனர்.

16 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 48 ஆயிரம் அரசு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில், புரட்சி முயற்சிக்கு துணை போன குற்றச்சாட்டின்பேரில் 3 மூத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களில் ஒருவர் துருக்கி முன்னாள் அதிபர் அப்துல்லா குல்லின் ஆலோசகர் குர்கான் பாலிக் ஆவார். இவர் முன்னாள் பிரதமர் அகமது தாவுடோக்லுவுக்கும் ஆலோசகராக பணியாற்றியவர் ஆவார்.

இன்னொருவர் துன்கே பஹாலி. இவர் கனடா நாட்டு தூதராக பணியாற்றியவர். மற்றொருவர் பின்டிக். இவர் கோஸ்டாரிகா நாட்டு தூதராக பணியாற்றியவர் என தகவல்கள் கூறுகின்றன.  கைது செய்யப்பட்ட மூவரும் முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிபர்இராணுவம்கைதுதுருக்கிபிரிவுபுரட்சிமுயற்சி
Comments (0)
Add Comment