துருக்கி காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் – 8 பேர் பலி

துருக்கி காவல் நிலையத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயம் அடைந்தனர்.   துருக்கியின் சிஸ்ரேவில் வன்முறையை அடக்கும் சிறப்பு படைப்பிரிவின் தலைமையகத்தை குறிவைத்து குர்திஷ் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்திஉள்ளனர். தாக்குதல் நடத்தியதில் சிறப்பு படையின் தலைமையகம் பெரிதும் சேதம் அடைந்து விட்டது.

வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 45 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது.   வெடிகுண்டு வெடித்த பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்திற்கு 12 ஆம்புலன்ஸ்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறிஉள்ளதாக செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.

முன்னதாக வெளியான புகைப்படத்தில் காவல் நிலையம் முற்றிலும் சீர்குலைக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்று இருந்தது. காவல் நிலையத்தை ஒட்டி இருந்த கட்டிடங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடைசியாக வெளியான தகவலின்படி காவல் நிலையம் மற்றும் அதன் அருகே இருந்த கட்டிடங்களில் தீ பிடித்து எரிவதாக தெரிவிக்கப்பட்டது.  கடந்த 2015-ம் ஆண்டு போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து குர்திஷ் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பயங்கரவாதிகள் துருக்கி பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு மற்றும் காயம் அடைவது தொடர் சம்பவம் ஆகிஉள்ளது.

உயிரிழப்புகாவல்தாக்குதல்துருக்கிநிலையம்பயங்கரவாதிகள்பலிவெடிகுண்டு
Comments (0)
Add Comment