துறைமுக நகரத்திட்டம் தொடரும்- சீனா பறக்கும் மைத்திரி

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் நிறுத்தப்படாது என்றும், அத்திட்டத்தை தொடர்ந்து செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.குறித்த திட்டத்தின் குறைபாடுகளை திருத்திக் கொண்டு மீண்டும் செயற்படுத்தப்படும் என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடலை நிரப்பி நிர்மாணிக்கப்படும் இந்த துறைமுக நகர நிர்மாணிப்பு பணிகளால் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அப்படியான பாதிப்புகள் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பணிகளை தொடர அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி பணிகள், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் நிறுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகி இருந்தன. எவ்வாறாயினும் இந்த அபிவிருத்தித் திட்டம் குறித்து பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்னாள் எதிர்க்கட்சியில் தலைவராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க கொழும்பு துறைமுக திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அங்கீகாரம்அமைச்சரவைகொழும்புதிட்டம்துறைமுகம்தொடர்புநகரம்நிறுத்தல்மைத்திரிராஜித சேனாரத்ன
Comments (0)
Add Comment