தென்னாபிரிக்காவில் கலவரம் – பாதுகாப்பிற்காக படையினர் நிலை நிறுத்தம்

தென் ஆப்பிரிக்காவில், இந்த மாதம் குறைந்தது ஏழு பேர் பலியாக காரணமாயிருந்த குடியேறிகளுக்கு எதிரான கலவரம் இடம்பெற்ற பகுதிகளில், படையினரை தென் ஆப்பிரிக்க அரச அதிகாரிகள் நிலை நிறுத்தியுள்ளனர்.

ஜொஹானஸ்பேர்க்கில் உள்ள கொந்தளிப்பான அலக்சாண்டிரா நகரியம் உட்பட, ஹெளடெங், மற்றும் குவா-சூலு நட்டால் மாகாணங்களின் பகுதிகளில், இராணுவத்தினர் இன்று இரவு முதல் ரோந்து நடவடிக்கையில் படுத்தப்படுவார்கள் என, பாதுகாப்பு அமைச்சர் நொசிவிவே முபிசா நுக்குலா தெரிவித்தார்

படையினரின் உதவியை போலிசார் கோரியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், வீதிகளில் ரோந்துப்பணியில் படையினர்கள் எத்தனை பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என, அவர் துல்லியமாக தெரிவிக்கவில்லை.

தென்னாப்ரிக்காவில், 2008 ஆம் ஆண்டு வெளிநாட்டவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரத்தில், 63 பேர் கொல்லப்பட்டதன் பின்னரே , படையினர் வீதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகள்அரசுஉதவிகலவரம்காரணம்கொந்தளிப்புஜொஹானஸ்பேர்க்கில்தென்னாபிரிக்காபடையினர்பலிபோலீசார்மாதம்
Comments (0)
Add Comment