தெற்கு-சூடானில் சிறார்கள் கடத்தப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது

தெற்கு-சூடானில் 13 வயதினர் அடங்கலாக பெருமளவிலான சிறார்கள் கடத்தப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. 12 வயதிற்கு மேற்பட்ட சிறார்களை வீடுவீடாக தேடிச் சென்ற ஆயுததாரிகள் குறைந்தது 89 பேரை பிடித்துச் சென்றுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

சிலர் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த வேளை பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். வடக்கு மாநிலமான மலாக்கலில் உள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரசாங்கப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் காரணமாக, இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களே இந்த முகாமில் உள்ளனர். மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினர் மீதும் சிறார் போராளிகளைப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது.

அடங்கல்ஆயுததாரிகள்இடப்பெயர்வுஐநாசிறார்சூடான்தெற்குமக்கள்மாநிலம்வயது
Comments (0)
Add Comment