கோலாலம்பூர், மலேசியா செனாவாங்கிலிருந்து பத்துமலைக்கு ஊர்வலமாக சென்று கொண்டிருந்த தைப்பூச பக்தர்கள் மீது கார் ஒன்று மோதியதில் 3 பேர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளனர்.
சிரம்பான் கோலாலம்பூர் விரைவுச் சாலையில் சற்றுமுன் அச்சம்பவம் நிகழ்ந்தது. அந்த விபத்தில் மேலும் 3 பக்தர்கள் காயமடைந்தனர். அவர்கள் ‘Universiti Kebangsaan Malaysia’ அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஊர்வலமாக சென்று கொண்டிருந்தவர்களை மோதிய BMW கார், நிற்காமல் அங்கிருந்து தப்பித்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மாண்ட பக்தர்களின் சடலங்கள், கோலாலம்பூர் பொது வைத்தியசாலைக்குக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.