இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியடைந்துள்ளதை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார். மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய ஜனாதிபதியிடம் கையளிப்பார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான இல்லத்திலிருந்தும் அவர் இன்று காலை வெளியேறிவிட்டார். தேர்தல் முடிவுகள் முழுமையாக இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அதிகாலை பிரதான எதிர்கட்சித் தலைவர் ரணில் விகரமசிங்கவை அவர் சந்தித்த பிறகு தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறினார்.
தேர்தல் முடிவு குறித்த முன்னணி நிலவரம் தெரிய வந்ததும் நாடெங்கிலும் மைத்திரி ஆதரவாளர்கள் பட்டாசுகளைக் கொளுத்திக் கொண்டாடினார்கள் .