விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தினர் கூறும் நிலையில், ரஷ்ய விமானப்போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர், இத்தகவலை தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தினர்தான் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டுவீழ்த்தினார்களா என்பது பற்றி விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என ரஷ்ய அதிகாரி கூறியுள்ளார்.
இதனிடையே, விமானத்தில் சென்ற 224 பயணிகளில் 175 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 15 கிலோமீட்டர் சுற்றளவு பரப்பில் விமானத்தின் உடைந்த பாகங்கள் சிதறிக் கிடப்பதால், மற்ற பயணிகளின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி விபத்துக்கான காரணத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எகிப்து விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் முகமது ஹொசம் கெமல் தெரிவித்துள்ளார்.