நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த ஓராண்டு கால அவகாசம் தேவை- லலித் வீரதுங்க

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த குறைந்தபட்சம் ஓராண்டு கால அவகாசம் தேவைப்படுவதாக  ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.  ‘நல்லிணக்கமும், புனரமைப்பும்’ என்ற தலைப்பில் இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள பிரச்சார ஆவணப்படத்தை அமெரிக்காவில் திரையிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண கால அவகாசம் தேவைப்படுகிறது.  உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கப்படும் வேகம் நியாயமானது. ஆனால் அந்த வேகத்தை மிகச் சிறந்தது என குறிப்பிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை போன்ற நிலைமைகள் காணப்பட்ட அபிவிருத்தி போன்று உலகின் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறான அபிவிருத்தி ஏற்படவில்லை. யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் தேவைப்படலாம். உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுகள் எட்டப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

லலித் வீரதுங்க
Comments (0)
Add Comment