மாகாணசபைத் தேர்தல்கள் ஒரே தினத்தில் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலையும் மாகாணசபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்த வேண்டும். இதன்மூலம் பாரியளவில் பணத்தை சேமிக்க முடியும்.இந்த ஆண்டில் இரண்டு மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதனால் அது பற்றி பேச வேண்டியதில்லை. ஏனைய தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதனால் மக்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதனை தவிர்க்க முடியும் என ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.கண்டியில் வைத்து அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.