அந்நாட்டிற்கு ஏவுகணையை ஏவிப் பரிசோதனை செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளடங்கலான உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
வட கொரியா மேற்படி ஏவுகணை மூலம் செய்மதியொன்றை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளதாக அந்நாட்டு தொலைக்காட்சி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஏவுகணை ஏவப்பட்டமை தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய நாடுகள் சபை அவசரக் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
வட கொரியாவின் இந்த நடவடிக்கை பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ளதாக குறிப்பிட்ட தென் கொரியா, தனது பிராந்தியத்தில் அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு முறைமையை ஸ்தாபிப்பது குறித்து அந்நாட்டுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கிறது.
வட கொரியாவிடமிருந்தான அச்சுறுத்தலை உலகிலேயே அதி முன்னேற்றகரமான மேற்படி ‘தாட்’ ஏவுகணை எதிர்ப்பு முறைமையை ஸ்தாபிப்பதன் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும் என தென் கொரிய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியான ரயு ஜி- – ஸெயுங் தெரிவித்தார்.
வட கொரியாவின் வட பையொங்கன் மாகாணத்திலுள்ள சொஹே விண்வெளி நிலையத்திலிருந்து பூவுலகை அவதானிப் பதற்கான கவாங்மையோங்கோங் -– 4 செய்மதி ஏவப்பட்டு 10 நிமிட நேரத்தில் பூமி யின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக வடகொரிய தேசிய விண்வெளி அபிவிருத்தி நிர்வாக அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
வட கொரிய தலைவர் கிம் யொங் உன்னின் உத்தரவின் பேரிலேயே இந்த செய்மதியை ஏவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் எதிர்காலத்தில் மேலும் பல செய்மதிகளை ஏவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வட கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஏவுகணை ஏவும் நடவடிக்கை போர் கப்பலொன்றின் மூலம் வழிநடத்தப்பட்டதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. மேற்படி ஏவுகணை ஏவும் செயற்பாட்டுக்கு சர்வதேச சமூகம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இந்த ஏவுகணை ஏவப்பட்டமை ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை மீறும் செயல் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி கூறினார்.
வட கொரியாவின் செயற்பாடுகள் கவலை தருவதாக உள்ளதென குறிப்பிட் டுள்ள சீனா, இதனால் கொரிய தீபகற்பத்தில் மேலும் பதற்றநிலை அதிகரிப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
வட கொரியாவின் இந்த ஏவுகணை ஏவும் நடவடிக்கை அமெரிக்க நியூஹம்ஷி யரில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு சீனாவே தீர்வுகாண வேண்டும் என குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அதேசமயம் அந்தக் கட்சியைச் சேர்ந்த பிறிதொரு வேட்பாளரான ஜெப் புஷ், வட கொரியா மீதான தாக்குதல் ஒன்றுக்கு மறுக் கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அத்த கைய தாக்குதல் ஒன்று எமது பாதுகாப்பிற்கு அவசியமானால், அது மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வட கொரியா இதற்கு முன் 2012 ஆம் ஆண்டில் நீண்டதூரம் பயணிக்கக்கூடிய ஏவு கணையொன்றை ஏவிப் பரிசோதித்தது.