அவர் ஏற்கனவே எழுதி பெரிய எண்ணிக்கையில் விற்ற சுயசரிதையான , “’A Long Walk to Freedom” என்ற நூலின் தொடராக அமையவிருக்கும் இந்தப் புத்தகம், நெல்சன் மண்டேலாவின் கையெழுத்து வரைவின் அடிப்படையில் அமைந்திருக்கும். இந்த கையெழுத்து வரைவின் அடிப்படையில், மண்டேலாவின் ஆலோசகர்கள், இந்த புத்தகத்துக்கு இறுதி வடிவம் தருவார்கள்.
மண்டேலா தனது ஆட்சிக்காலத்தில் எதிர்கொண்ட சிரமங்களையும், சமகால தென்னாப்பிரிக்காவில் நிலவும் பிளவுகளையும் பற்றி வெளிப்படையாக்க் கூறும் ஒரு புத்தகமாக இது அமையும் என்று இதன் வெளியீட்டாளர்களான,பான் மாக்மில்லன் தெரிவிக்கிறது. நெல்சன் மண்டேலா 2013 டிசம்பரில் காலமானார்.