ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிற்கு மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு துணை முதலமைச்சர் டிமிட்ரி ரோக்சின், வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கை லாவ்ரோ உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, வர்த்தகம், பாதுகாப்பு, அணுசக்தி ஒத்துழைப்பு, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மேலும் பேச்சுவார்த்தையின் போது, நேதாஜி குறித்த ஆவணங்களை இந்தியாவிடம் பகிர்ந்துகொள்ளும் படி செர்கை லாவ்ரோவிடம் ஸ்வராஜ் வலியுறுத்தினார். நேதாஜி குறித்த ஆவணங்கள் ரஷ்யாவிடம் இருந்தால், அவை இந்தியாவிடம் பகிர்ந்துகொள்ளப்படும் என்று லாவ்ரோவும் உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், இந்தியாவின் உண்மையான நண்பனாக ரஷ்யா திகழ்வதாக கூறினார்.