தங்களது கோரிக்கைகளின் தீவிரத்தன்மையை பேச்சு வார்த்தையின்போது அரசு புரிந்துகொள்ளவில்லை என்று கூறி நேபாளத் தலைநகர் காத்மாண்டில் ஐக்கிய ஜனநாயக மதேசி முன்னணி (யுடிஎம்எஃப்) அமைப்பினர் வெள்ளிக்கிழமை ஒன்று கூடி போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்காத காரணத்தால், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் 11 நாள்கள் போராட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம். இதன்காரணமாக, நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பேச்சுவார்த்தையை நடத்துவார் என்று நம்புகி றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெராய் மதேசி ஜனநாயகக் கட்சியின் தலைவர் மஹந்த் தாகுர் கூறுகையில், ”எங்களது கோரிக்கையை அரசு எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை; எங்களுக்கும், அரசுக்கும் இடையே இதுவரை 12 முறை பேச்சுவார்த்தை நடைபெற் றுள்ளது என்றார் மஹந்த் தாகுர்.
முன்னதாக, ”புதிய அரசியல் சாசனத்தில் மதேசிகளுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது; அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தேவையற்றது’ என்று பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்திருந்தார்