நைஜீரியா நாட்டில் போகோ ஹரம் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகிறார்கள்

நைஜீரியா எல்லையில் நடந்த தாக்குதலில் 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். நைஜீரியா நாட்டில் போகோ ஹரம் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகிறார்கள். அண்டை நாடுகளை சேர்ந்த ராணுவம் நைஜீரியாவுடன் இணைந்து போகோ ஹரம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

நைஜீரியா நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள சாட் மற்றும் கேமரூன் நாடுகளில் போகோ ஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சாட் ராணுவம் 2500 ராணுவ வீரர்களை குவித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் இந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 1000 பேர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே கேமரூரன் நாட்டின் எல்லையில் உள்ள வடகிழக்கு நைஜீரியாவின் நகரங்களான காம்பரு மற்றும் நாகலா நகரங்களில் போகோ ஹரம் தீவிரவாதிகள் மீது சாட் ராணுவம் நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அட்டூழியம்அதிரடிஎல்லைகொலைகள்தாக்குதல்தீவிரவாதம்நைஜீரியாபலிபோகோ
Comments (0)
Add Comment