பணமோசடிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்கின்றார் பீ.எச்.பியசேன

தனது செயலாளர் எனக்கூறி பணமோசடியில் ஈடுபட்ட குமார என்பவரின் மோசடிச் செயலுக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் பணமோசடியில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன தெரிவித்தார்.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் அக்கரைப்பற்று சாகாமம் வீதியிலுள்ள பணிமனையில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே  பியசேன இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

குமார என்று அழைக்கப்படும் தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த நீதுவ ஹென்றி சுமித் ரஞ்சன் என்பவர் கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் என்னுடைய பாதுகாப்புப் பிரிவில் மெய்பாதுகாவலராக கடமையாற்றிய ஞானஐயா என்பவர் மூலம் எனக்கு அறிமுகமாகி, என்னுடைய உத்தியோகப்பற்றற்ற உதவியாளராக செயற்பட்டு வந்தார்.

இவர் தொடர்பாக கடந்த டிசம்பர் முதற்பகுதியில் பாராளுமன்ற கட்டிடத்தில் சந்தித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா என்னிடம் கூறுகையில், உங்களுடைய செயலாளர் குமார என்ற நபர் உங்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, பலரிடம் பல லட்சம் ரூபா பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவாதாக எனக்கு முறைப்பாடு கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் டிலான் தெரிவித்தார்.

எனவே அமைச்சர் கூறியது போன்று எனக்கும் மோசடி நபரான குமார என்பவரின் செயலுக்கும் எதுவித தொடர்புமில்லை என்றும் அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கின்றேன். என்றார் பியசேன

பணமோசடி
Comments (0)
Add Comment