பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானிடம் முறையீடு: ராஜ்நாத் சிங்

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் பாகிஸ்தான் மேலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்திய அரசு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாதத்திற்கு யார் காரணம் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதற்குமே தெரியும் என்று அவர் கூறினார். பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் ஒத்துழைக்கவேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா ஏற்கனவே கேட்டுக்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாஒத்துழைப்புபயங்கரவாதம்பாகிஸ்தான்ராஜ்நாத் சிங்
Comments (0)
Add Comment