இப்பயணம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி, இம்மாநாட்டில் பருவநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். பருவநிலை மாற்றத்தைக் குறைக்க இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளையும் மாநாட்டில் கூறவுள்ளதாக ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிஸில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்பட சுமார் 150 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதையொட்டி பாரிஸ் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.