பறவை இனங்களை கணக்கிட்டு அறிவிக்கும் போட்டி

பறவைகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கவும், பறவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உயிரியல் ஆய்வாளர்கள் பங்கேற்ற போட்டி இஸ்ரேலில் நடைபெற்றது  பறவைகளை வேட்டையாடுவதால், அரிய வகை பறவை இனங்கள் அழிந்து வருகின்றன.

பறவை இனங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தெற்கு இஸ்ரேலின் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஏரியில் பறவை இனங்களை கணக்கிட்டு அறிவிக்கும் போட்டி நடைபெற்றது.  இஸ்ரேலில் மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற இந்த போட்டியில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 190 உயிரியல் ஆய்வாளர்கள், 40 குழுக்களாக பங்கேற்றனர். இப்போட்டியில் 150 பறவை இனங்களை கணக்கிட்டு அறிவித்த லண்டன் குழுவிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

அறிவிப்புஇனம்இஸ்ரேல்கடற்கரைகணக்கீடுபறவைபாதுகாப்புபோட்டிவிழிப்புணர்வு
Comments (0)
Add Comment