வடக்கில் இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் பொதுமக்களிடம் மீண்டும் கையளிக்கப்படுமாக இருந்தால் அவர்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்குப் பிரித்தானியா உதவிகளை வழங்கத் தயாராக இருக்கின்றது என பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் கூறியுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை 30/01/2015மீள் குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளதாக சுவாமிநாதன் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.