பலத்த சர்ச்சைக்கு மத்தியில் கசூரியின் புத்தகம் மும்பையில் வெளியீடு

மிகுந்த சர்ச்சைக்கிடையில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கசூரியின் புத்தம் மும்பையில் இன்று வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மெஹ்மூத் கசூரி, தமக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக மகாராஷ்ட்ரா அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் பற்றி பகிர்ந்து கொண்ட கசூரி, முகமது அலி ஜின்னா, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பரஸ்பர பயணங்கள் தொடர்பான தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்தும் வழிமுறைகள் குறித்து தனது புத்தகத்தில் பரிந்துரைத்துள்ளதாக கசூரி தெரிவித்தார்.

ஒவ்வொரு பாகிஸ்தானியரும் இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல என்பதை சிவசேனா கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும் என்று கசூரி தெரிவித்தார்.

 முன்னதாக, இந்த புத்தக வெளியீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தக வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (observer research foundation) அமைப்பின் தலைவர் சுதீந்திர குல்கர்னி மீது சிவசேனா கட்சியினர் கருப்பு பெயிண்ட் ஊற்றினர். எனினும் திட்டமிட்டபடி பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கசூரி பங்கேற்று அவரது புத்தகத்தை வெளியிட்டார்.

கசூரிசிவசேனா கட்சியினர்பலத்த சர்ச்சைபாகிஸ்தான் அமைச்சர்புத்தகம்மகாராஷ்ட்ரா அரசுமும்பை
Comments (0)
Add Comment