ஜம்மு காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் அதிரடி துல்லிய தாக்குதலை கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தியது.
இந்நிலையில், நேற்று முன் தினம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகில் பயங்கரவாதிகளோடு நடைபெற்ற சண்டையில், இந்திய ராணுவ வீரர் மன்ஜித் சிங் வீரமரணம் அடைந்தார். அவரது உடலை இழுத்துச் சென்ற பயங்கரவாதிகள், உடலை துண்டு துண்டாக வெட்டி எல்லைப் பகுதியில் வீசிவெட்டு சென்றனர். இதனால் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இதனையடுத்து பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய எல்லைக் கோட்டு பகுதியில் உள்ள பாகிஸ்தான நிலைகள் மீதும் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் நேற்று முதல் அதிரடி தாக்குதலில் ஈடுப்பட்டனர்.
கேரன் பகுதியில் நீண்ட நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலில், பாகிஸ்தானின் நான்கு ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.