இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிந்துள்ள மோடி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி செல்லும் வழியில்,லாகூர் சென்று அங்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபை சந்தித்து பேச உள்ளேன். இன்று பிறந்த நாளை கொண்டாடும் நவாஸ் ஷெரிஃபுக்கு போனில் வாழ்த்து சொன்னதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் பாகிஸ்தான் சென்றிருந்தார்.அதன் பின்னர் 11 ஆண்டுகள் கழித்து இன்று பாகிஸ்தான் சென்றுள்ளார் மோடி. இன்று நவாஸ் ஷெரிஃபுடனான மோடியின் சந்திப்பு குறித்து எந்தஒரு தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் லாகூரில் பிரதமர் மோடியை நவாஸ் செரீப் வரவேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே லாகூரை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.