பாக்கில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூவர் கைது!

பாகிஸ்தானில் கைபர் பக்துங்குவா மாகாணத்தில் சபைத் சாங்க் சாலையில், நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக 3 தீவிரவாதிகள் இடுப்பில் வெடிகுண்டுகளை வைத்து கட்டிக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அப்போது 3 தீவிரவாதிகளில் ஒருவர் இடுப்பில் கட்டிஇருந்த வெடிகுண்டு, எதிர்பாராதவிதமாக வழியிலேயே வெடித்து விட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு, உயிரிழந்தனர். அந்த நேரத்தில் சாலையில் ஆட்கள் நடமாட்டமோ, வாகன போக்குவரத்தோ இல்லாததால் விரும்பத்தகாத விளைவுகள் எதுவும் நேரவில்லை.

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து, ஒரு தீவிரவாதியின் உடலில் இருந்த வெடிகுண்டுகளை கைப்பற்றி, செயலிழக்கச் செய்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் இருந்து 9 கையெறி குண்டுகளையும், ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கியையும் கைப்பற்றினர்.

பலியான தீவிரவாதிகளின் அடையாளம், அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

கைதுதற்கொலைப்படைதீவிரவாதிகள்பாக்கிஸ்தான்போலீஸ்விசாரணை
Comments (0)
Add Comment