பாக்கிஸ்தானில் அவசரமாக கூடுகின்றது மந்திரி சபை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று (வெள்ளிக்கிழமை) மந்திரிசபை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. மந்திரிசபை கூட்டத்தில், காஷ்மீரில் தற்போதுள்ள சூழ்நிலை, ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்றது, நியூயார்க்கில் இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது. விவாதத்துக்கு முன்னதாக வெளியுறவு செயலாளர் இதுபற்றி விளக்குவார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புஇந்தியாஇராணுவம்காஷ்மீர்தாக்குதல்பயங்கரவாதம்பாக்கிஸ்தான்மந்திரிசபைமுகாம்
Comments (0)
Add Comment