பாக்கிஸ்தானில் நிலநடுக்கம்! வீடு இடிந்து சிறுமி பலி

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.1 ரிக்டர் அலகாக பதிவானது.
பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது. இதனால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக பலுசிஸ்தானில் உள்ள லாஸ்பெல்லா பகுதியில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளில் சிக்கிய சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
இதேபோல், பெஷாவர் மாகாணத்தில் உள்ள பள்ளியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வெளியே ஓடிவந்த 2 மாணவர்கள் காயமடைந்தனர் என மாகாண மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைபர் பாக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாண பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது என்றனர்.
கடந்த 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 74000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமிநிலநடுக்கம்பலிபாக்கிஸ்தான்
Comments (0)
Add Comment