பாக்கிஸ்தானில் ரிக்‌ஷா மீது ரயில் மோதி ஏழு குழந்தைகள் பலி!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லோத்ரன் புறநகர் பகுதியில் ஆளில்லா ரெயில்வே கேட் உள்ளது. நேற்று காலை அப்பகுதியை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 2 மோட்டார் ரிக்‌ஷாக்கள் கடந்தன.

அப்போது கராச்சியில் இருந்து லாகூருக்கு அதிவேகமாக வந்த ரெயில் அந்த ரிக்‌ஷாக்கள் மீது மோதியது. இதனால் அந்த ரிக்‌ஷாக்கள் நொறுங்கி சேதம் அடைந்தன.

இந்த விபத்தில் பள்ளிக் குழந்தைகள் 7 பேர் பலியாகினர். ரிக்‌ஷா டிரைவர் ஒருவரும் உயிரிழந்தார். பலியான குழந்தைக்கு 3 முதல் 8 வயது இருக்கும்.

இவர்கள் தவிர 7 குழந்தைகள் காயம் அடைந்தனர். அனைவரும் மீட்கப்பட்டு அருகேயுள்ள பக்வல் பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்கு கடும் மூடு பனியே காரணமாக கருதப்படுகிறது. அதிக அளவில் மூடுபனி கொட்டியதால் ரெயில் வருவதை டிரைவர்களால் கணிக்க முடிய வில்லை.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ரெயில்வே மந்திரி சாத்ரபீக் உத்தரவிட்டுள்ளார். மேலும் பணியில் இருந்த 2 ரெயில்வே தொழிலாளர்களை ‘சஸ்பெண்டு’ செய்து உத்தரவிட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பஞ்சாப் மாகாண முதல் -மந்திரி ஷாபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தோருக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குழந்தைகள்பலிபாக்கிஸ்தான்மூடு பனிரயில்ரிக்‌ஷாவிபத்து
Comments (0)
Add Comment