பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்!

பாகிஸ்தான் எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவதுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டும் வருகிறது.

இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து கடும் தாக்குதலில் ஈடுபட்டுவரும் நிலையில், பாகிஸ்தான் நாட்டுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் பீட்டர் குக் கூறுகையில்,
பாகிஸ்தானில் உள்நாட்டு தீவிரவாதமும், எல்லைத்தாண்டிய தீவிரவாதமும் தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தீவிரவாதத்துக்கு பாகிஸ்தானில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் இணைந்து பேச்சுவார்த்தை முயற்சியில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தான் மக்களுக்கு எதிராகவும், எல்லைத்தாண்டியும் தீவிரவாத அச்சுறுத்தல்களும் அங்கு தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.

பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பாதுகாப்பு குறித்து தொடர்ந்து அந்நாட்டு தலைவர்களுடன் சீரான தொடர்பில் உள்ளோம். பாகிஸ்தானில் நிலவும் சூழலை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம் என்று பீட்டர் குக் தெரிவித்தார்.

அமெரிக்காஇந்தியாஇராணுவம்ஒப்பந்தம்கண்டனம்தீவிரவாதம்பாக்கிஸ்தான்போர் நிறுத்தம்
Comments (0)
Add Comment