பாக்கிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடங்களை மூட வேண்டும் – அமெ. எச்சரிக்கை

பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள அனைத்து தீவிரவாதிகளின் புகலிடங்களையும் மூட வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.  பாகிஸ்தான் நாட்டில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் நடந்த சார்க் உள்துறை மந்திரிகளின் மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், “தீவிரவாதிகள் மீது மட்டுமின்றி அவர்களுக்கு புகலிடம் கொடுப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீவிரவாதிகளின் படுகொலைகளை புகழ்வதோ, அவர்களை தியாகிகள் ஆக்குவதோ கூடாது” என்று வலியுறுத்தினார்.  ராஜ்நாத் சிங் தனது குரலை எழுப்பிய மறுநாளே அமெரிக்கா பாகிஸ்தானுக்கு இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது:-  பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் சில குறிப்பிட்ட இயக்கங்களை மட்டும் கவனத்தில் கொள்ளக்கூடாது. அண்டை நாடுகளை தாக்கும் அமைப்புகள் உள்பட அனைத்து தீவிரவாத இயக்கங்களையும் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

தீவிரவாதிகளின் அனைத்து பாதுகாப்பு புகலிடங்களையும் அவர்கள் நிபந்தனையற்ற காலவரையறைக்குள் மூடவேண்டும் என்று அந்நாட்டு அரசின் உயர்மட்ட அள வில் எடுத்துக் கூறியுள்ளோம்.  தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக பிராந்திய அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை அமெரிக்கா ஊக்குவிக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் உள்ள தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள அந்த இரு நாடுகளும் மிக நெருங்கிய ஒத்துழைப்புடனும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.  அந்த இரு நாடுகளிலும் தீவிரவாதம் இருப்பது வெளிப்படையான உண்மை. அவர்களை எதிர்த்து தீவிரமாக போராட வேண்டுமானால் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

சில விவகாரங்களில் அந்த இரு நாடுகளிடையே உடன்பாடின்மையும், வருத்தங்களும் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.  இதுபற்றி நான் விரிவாக சொல்ல விரும்பவில்லை. பாகிஸ்தான் அந்நாட்டில் நடைபெறும் அனைத்து தீவிரவாத செயல்களையும் தடுத்து நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். பாகிஸ்தான் தரப்பில் இதற் கான நடவடிக்கையை, அதிகமான நடவடிக்கையை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காஎச்சரிக்கைதீவிரவாதிகள்பாக்கிஸ்தான்புகலிடம்மூடுதல்
Comments (0)
Add Comment