பாக்கிஸ்தான் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்வதற்கு இந்தியா காட்டிவரும் எதிர்ப்பு காரணமாக கொழும்பு போர்விமானங்களை வாங்குவதை தவிர்க்கலாம், மேலும் குறிப்பிட்ட விமானமொன்றின் விலை 35 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் இதுவும் கொழும்பு தனது முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாக்கிஸ்தான் விமானங்களிற்கு பதில் இந்தியாவின் தேஜஸ் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை இணங்கியுள்ளதாக, இந்தியா அதனை விற்பதற்கு இணங்கியுள்ளதாக வெளியான செய்திகளை இந்திய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.