சம்பவ இடத்திற்கு போலீசாரும், மீட்புக்குழுவினரும் ஆம்புலன்சுகளுடன் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்பில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் இறந்திருப்பதாக மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.