பாக்தாத்தில் தற்கொலைத் தாக்குதல் – 29 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று காலை 3 இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வடக்கு பாக்தாத்தில் போலீசார் மற்றும் ராணுவ சோதனைச் சாவடி அருகில் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது.

மற்ற இரு தாக்குதல்கள் அரசு ஆதரவு துணை ராணுவக் குழுவினர் மீது நேரடியாக நடத்தப்பட்டது.   இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை 29 ஆக உயர்ந்துள்ளது. 100 பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஜிகாத் குழுவினர் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து அடிக்கடி தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஈராக்தற்கொலைதலைநகர்தாக்குதல்படைபாக்தாத்
Comments (0)
Add Comment