பாகிஸ்தானின் பெஷாவர் மாவட்டத்தில் ஷப்கத்தார் என்ற இடத்தில் மாவட்ட செசன்சு கோர்ட்டு உள்ளது. இங்கு தீவிரவாதி ஒருவன் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு கோர்ட்டு வளாகத்திற்குள் நுழைய முயன்றான். போலீசார் அவனை தடுத்து நிறுத்தினர்.
உடனே அவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த தற்கொலைப்படை தாக்குதலில், 2 போலீசார், 4 பெண்கள் உள்பட 14 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 26 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 2011–ம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு பழிவாங்குவதற்காக இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றதாக தெரிகிறது.