பாக்.பேருந்தில் குண்டு வெடிப்பு – 15 பேர் பலி

பாகிஸ்தானில் பேருந்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.   பாகிஸ்தான் மாநிலம் பெஷாவரில் அரசு அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது பேருந்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில், பேருந்தில் இருந்த 5 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.   படுகாயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பால் அருகில் இருந்த கட்டிடங்களும் பலத்த சேதம் அடைந்தன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு தாக்குதலையடுத்து பெஷாவர் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிஅரசுகுண்டுபலிபாக்கிஸ்தான்பேருந்துவெடிப்பு
Comments (0)
Add Comment