பாரிசில் கடந்த நவம்பர் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தொடர் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பிரான்சிஸ் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு தற்போது வரை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பாரிசில் கைத்துப்பாக்கிகளுடன் நடமாடிய மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரிஸ் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைய முயன்றுள்ளார். அவரை சோதனை செய்ததில் அவர் கொண்டு வந்திருந்த பையில் இரண்டு கைத்துப்பாக்கிகள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் குரான் தொடர்பான புத்தகம் ஒன்றும் இருந்தது. அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள மனிதருடன் தொடர்புள்ள பெண் ஒருவரையும் போலீசார் தேடி வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.