அங்குள்ள பிரபல ஹோட்டல் ஒன்றிற்குள் புகுந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கிருந்தவர்கள் உயிருக்கு அஞ்சி ஓட்டமெடுத்தனர். இந்தச் சம்பவம் காரணமாக அந்தப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. இதனைத்தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கம் ஒன்றினுள் நுழைந்த பயங்கரவாதிகள் பார்வையாளர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
அந்த அரங்கின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவங்களில் சுமார் நாற்பது பேர் உயிரிழந்துவிட்டதாக பிரான்ஸைச் சேர்ந்த BFM தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து பிரான்ஸ் – ஜெர்மனி அணிகளுக்கு நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடைபெற்ற மைதானத்தின் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதனால் சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.