பாரிஸ் தாக்குதல் தீவிரவாதி நாடுகடத்தப்படுவார் – ஃப்ரான்ஸ்வா ஒல்லாந்த்

பாரிஸ் தாக்குதல் தொடர்பாக நேற்று ப்ரஸ்ஸல்ஸ் நகரில் கைதுசெய்யப்பட்ட சலா அப்தேசலாம் மருத்துவ சிகிச்சை முடிந்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று நடந்த தேடுதல் வேட்டையின்போது, துப்பாக்கியில் சுடப்பட்டு காயமடைந்த சலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் பிரான்ஸ் நாட்டு அதிபர் ஃப்ரான்ஸ்வா ஒல்லாந்த், விரைவிலேயே ஃப்ரான்ஸிற்கு நாடுகடத்தப்படுவார் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ஐரோப்பாவில் இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாதக் குழுவுக்கு இருக்கும் தொடர்பு, பிற தாக்குதல் திட்டங்கள், பாரிஸில் நடந்த தாக்குதலைத் திட்டமிட்டது, நிதியுதவி செய்தது யார் என்பது போன்ற தகவல்களை சலா அளிப்பார் என பாதுகாப்பு ஏஜென்சிகள் கருதுகின்றன. கடந்த நவம்பரில் பாரிஸில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

ஃப்ரான்ஸ்வா ஒல்லாந்த்கைதுதாக்குதல்நகர்நாடுகடத்தல்பாரிஸ்மருத்துவசிகிச்சை
Comments (0)
Add Comment