பாரிஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்
பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸின் முக்கியப் பகுதிகளில் இந்தத் தேடுதல் வேட்டை நடைபெற்றதாக அந்நாட்டின் சட்ட அமைச்சர் ERIC VAN DER SYPT தெரிவித்தார். காவல்துறை நடவடிக்கையின் போது ஒரு கார் மீது காவலர்கள் இருமுறை சுட்டதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் வெடிபொருள்களோ, ஆயுதங்களோ கைப்பற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும் பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவராகக் கருதப்படும் சலா அப்தஸ்லாம் இன்னமும் காவல்துறையிடம் அகப்படவில்லை.