பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டன

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான, மூன்று நாள் சண்டை நிறுத்தம், நேற்று காலை, முடிவுக்கு வந்த அடுத்த சில வினாடிகளில், பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டன. இதனால், சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்து, இரு தரப்பினரும் மீண்டும் தாக்குதலை துவக்கினர்.

பயங்கரவாத அமைப்பு : மத்திய தரைக்கடல் நாடுகளான இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே, நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் போக்கு, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை, ‘ஹமாஸ்’ மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் கைப்பற்றியதை அடுத்து, மிக மோசமானது.

கடந்த மாத துவக்கத்தில், மூன்று யூதச் சிறுவர்களை, பயங்கரவாதிகள் கடத்திச் சென்று, பல நாட்கள் அடைத்து வைத்து, சித்ரவதை செய்து கொன்றனர். அதை உறுதிபடுத்திய இஸ்ரேல், ஜூலை 8 முதல், ஹமாஸ் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள பாலஸ்தீனம் மீது, விமான தாக்குதல் மற்றும் தரை வழி தாக்குதல் நடத்தியது.

இம்மாதம் 5ம் தேதி வரை, தொடர்ந்து நடைபெற்ற இந்த தாக்குதலில், 1,900 பாலஸ்தீனியர்கள், 65 இஸ்ரேல் வீரர்கள் மற்றும் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்தில் பாதிப்பு அதிகமாக இருந்த போதிலும், இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை, ஹமாஸ் பயங்கரவாதிகள் கைவிடவில்லை. இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தியதால், பலி எண்ணிக்கை அதிகரித்தது. அதில், பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள், இஸ்ரேலுக்குள் நுழையும், 32க்கும் மேற்பட்ட, பல கி.மீ., நீள சுரங்கப் பாதைகள் தகர்க்கப்பட்டன. அண்டை நாடுகளில் ஒன்றான, எகிப்தின் ஏற்பாட்டின்படி, 5ம் தேதி முதல், 72 மணி நேர சண்டை நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. அது, நேற்று காலை, 8:00 மணிக்கு நிறைவடைந்தது. சண்டை நிறுத்தத்தை தொடர, இஸ்ரேல் தயாராக இருந்த நிலையில், பாலஸ்தீனத்திலிருந்து ஏவுகணைகள் வீசப்பட்டன.

மீண்டும் பதுங்கல் : அவற்றை, இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்ப ஏவுகணைகள் வழியிலேயே தகர்த்தன. சில ஏவுகணைகள், பாலஸ்தீனத்தின் பகுதிக்குள் விழுந்து வெடித்தன. இஸ்ரேலும் பதில் தாக்குதலை துவக்கியதால், மூன்று நாட்களாக தாக்குதல் பீதியின்றி இருந்த பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் மக்கள், மீண்டும் பதுங்கினர். ஹமாஸ் பயங்கரவாதிகள் தான், தாக்குதலை நடத்தினர் எனக் கூறப்பட்டதை, அவர்கள் மறுத்துள்ளனர். மற்றொரு பயங்கரவாத அமைப்பான, ‘இஸ்லாமிய ஜிகாத்’ மற்றும் சில பயங்கரவாத குழுக்கள் தான், தாக்குதலை துவக்கின என்று, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருசண்டைதரப்பினரும்தாக்குதலைதுவக்கினர்நிறுத்தம்மீண்டும்முடிவுக்குவந்து
Comments (0)
Add Comment