பாலஸ்தீனத்துடன் ஐரோப்பிய யூனியன் அமைதிப் பேச்சுவார்த்தை: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு

பாலஸ்தீனத்துடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய யூனியனின் பங்களிப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ராஜாங்க ரீதியிலான அமைதி நடவடிக்கைகளில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பங்களிப்பு குறித்து மறுஆய்வுக்கு உட்படுத்துமாறு நாட்டின் வெளியுறவுத்துறைக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

ஆக்ரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள், இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டதாகக் கருத முடியாது என ஐரோப்பிய யூனியன் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுடனான உறவு பாதிக்கப்படாது என்றும் இஸ்ரேல் குறிப்பி்டடுள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தைஇஸ்ரேல்ஐரோப்பிய யூனியன்கடும் எதிர்ப்புபாலஸ்தீனம்
Comments (0)
Add Comment