பாலியல் அடிமைகளாக மாற மறுத்த 250 பெண்களுக்கு மரண தண்டனை!

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் வட ஈராக்­கிய நக­ரான மொசூலில் பாலியல் அடி­மை­க­ளாக மாற மறுத்த சுமார் 250 பெண்­க­ளுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக குர்திஷ் ஜன­நா­யக கட்­சியைச் சேர்ந்த உத்­தி­யோ­கத்தர் ஒருவர் அதிர்ச்சித் தக­வலை வெளி­யிட்­டுள்ளார்.
அந்தப் பெண்­க­ளுக்கு தமது குழு வைச் சேர்ந்த உறுப்­பி­னர்­களை தற்­கா­லி­க­மாக திரு­மணம் செய்­வ­தற்கு ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தது.
இந்­நி­லையில் தீவி­ர­வா­தி­களின் வேண்­டு­கோளை ஏற்க மறுத்த அந்தப் பெண்­க­ளுக்கு தீவி­ர­வா­திகள் மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக குர்திஷ் ஜன­நா­யக கட்­சியைச் சேர்ந்த அதி­கா­ரி­யான செய்த் மமு­ஸினி, அஹ்­லுல்­பாயத் செய்தி முகவர் நிலை­யத்­துக்கு அளித்த பேட்­டியில் தெரி­வித்­துள்ளார்.
மொசூல் பிராந்தியமானது 2014 ஆம் ஆண்டிலிருந்து தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.

அடிமைகள்ஐ.எஸ். தீவிரவாதிகள்குர்திஷ்சிரியாபாலியல்மரண தண்டனைமொசூல்
Comments (0)
Add Comment