பாலியல் தொழிலுக்கு மறுத்த ஈராக் பெண்களின் தலையறுத்த ஐஎஸ்ஐஎஸ்

250 பெண்ககளின் தலைகளை வெட்டி கொலை செய்த சம்பவம் ஒன்று உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை பிடித்து உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், பல பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதுடன் அவர்களை சந்தையில் செக்ஸ் அடிமையாக விற்று வருகிறார்கள். ஈராக்கை சேர்ந்த மொசுல் நகரைச் சேர்ந்த இளம் பெண்களை கடத்தி செக்ஸ் அடிமைகளாக்க முயன்ற தீவிரவாதிகளின் செயலுக்கு ஒத்துழைக்க மறுத்த 250 பெண்களின் தலையை வெட்டி ஐ.எஸ் அமைப்பினர் கொலை செய்துள்ள தகவல் தற்சமயம் வெளியாகி மிகுந்த பரபரப்பை உருவாக்கியுள்ளது.

லண்டன் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு குர்திஸ் சுதந்திர கட்சியின் செய்தித் தொடர்பாளர், அளித்த பேட்டியில் பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதுடன், செக்ஸ் அடிமைகளுக்கான சந்தையில் அவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் விற்றுவிடுவதாகவும், இதற்கு உடன்படாத பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் கூட தீவிரவாதிகள் கொன்றுவிடுவதாகவும் தெரிவித்தார், உலக நாடுகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், தீவிரவாதிகளை எதிர்த்து உலக நாடுகள் ஒன்றினைந்து போராட வேண்டும் என்ற குரலுக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.

அதிர்ச்சிஉலகம்ஐஎஸ்ஐஎஸ்கொலைதலைதொழில்பாலியல்பெண்கள்வெட்டுதல்
Comments (0)
Add Comment