பாலியல் தொழில் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக இந்தோனேசியாவில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வந்த கட்டடங்களை அந்நாட்டு அரசு இடித்து நொறுக்கியது.
இந்தோனேசியாவில் பாலியல் தொழிலை வரும் 2019 ஆம் ஆண்டிற்குள் ஒழிக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாக நாடு முழுவதும் செயல்படும் நூற்றுக்கணக்கான பாலியல் விடுதிகள் இருக்கும் கட்டடங்களை தகர்க்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள கலிஜோடோ பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் கட்டடங்களில் ஆயிரக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் சுமார் 3 ஆயிரம் பேர் ஒரு வார காலத்தில் வசிப்பிடங்களைக் காலி செய்துவிட்டு அரசு அளித்துள்ள குறைந்த விலைக் கட்டடங்களில் குடியேற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து காவல் துறை பாதுகாப்புடன் கட்டடங்களை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.