90 பேருக்கு இந்த பரீட்சார்த்த வலி நிவாரணி வழங்கியுள்ளதாகவும், அதில் அறுவர் மூளை பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பேரில் ஒருவரின் மூளை செயலிழந்துள்ளதாகவும், ஏனைய ஐவரில் மூவரின் மூளை நிரந்தரமாக செயலிழக்கவுள்ளதாகவும் பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றது.
மேலும் ஒருவருக்கு நரம்பியல் பதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வலி நிவாரணி போர்த்துக்கேய நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டது. வலி நிவாரணியின் பரீட்சார்த்த நடவடிக்கை தற்போது முடக்கப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.