பிரிட்டனில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புக்களை சந்தித்த பிரதமர் கமரூன்

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன்  புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை சந்தித்த பின்னரே இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கச் சென்றதாக  பிரிட்டனின் நாடாளுமன்றில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார பணியக துணை அமைச்சர் சயீடா வர்சி நேற்று முன்தினம் வெளியிட்ட தகவலின் படி பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்க முன்னதாக பிரிட்டனில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புக்களை பிரதமர் கமரூன் சந்தித்திருந்தார். பிரிட்டன் தமிழ் போரம், குளோபல் தமிழ் போரம் உள்ளிட்ட பத்து தமிழ் அமைப்புக்களுடன் அவர் பேச்சு நடத்தினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ம் திகதி நாடாளுமன்ற வளாக அறையொன்றில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது இலங்கைத் தமிழர் பிரச்சினை  இறுதிக்கட்ட போர்  மனிதஉரிமைகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் போன்ற விடயங்கள் குறித்து தமிழ் அமைப்புக்களுடன் கலந்துரையாடப்பட்டிருந்தது.

வெளிவிவகார அமைச்சர் ஹிகோ சுவைரும் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக தமிழர் பிரதிநிதிகள் பலரை சந்தித்து பேச்சு நடத்தியதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் பிரிட்டன் அமைச்சர்.

அமைப்புக்களைகமரூன்சந்தித்ததமிழ்
Comments (0)
Add Comment