பிரிட்டன் எம்.பி க்களுக்கு மொசாத் உளவுத்துறை பயிற்சி!

பெண் எம்.பி. படுகொலையை தொடர்ந்து இங்கிலாந்து எம்.பி.க்களுக்கு இஸ்ரேல் உளவுத்துறை மூலம் மொசாத் தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இங்கிலாந்தில் கடந்த மாதம் தனது தொகுதிக்கு மக்கள் குறை கேட்க சென்ற பெண் எம்.பி. கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். எனவே, அனைத்து எம்.பி.க்களுக்கும் தற்காப்பு கலை பயிற்சி அளிக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்தது.

அதன்படி இஸ்ரேல் உளவுத்துறை மூலம் ‘மொசாத்’ தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஜூடோ, குத்துச்சண்டை, தெருவில் நடைபெறும் தாக்குதல்களை சமாளிப்பது உள்ளிட்டவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சிகள் தவிர சொற்பொழிவு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் தீவிரவாதிகள், அரசியல் எதிரிகள், பெண்களை பின் தொடர்ந்து கொலை, கொள்ளையில் ஈடுபடுபவர்களிடம் இருந்து எம்.பி.க்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என கருதப்படுகிறது.

இஸ்ரேல்தற்காப்புதீவிரவாதிகள்பயிற்சிபிரிட்டன்பெண்கள்மொசாத்
Comments (0)
Add Comment