பிரித்தானியாவின் North Shields நகரை சேர்ந்தவர் Praju Prasad (24), இவருக்கு சமூக வலைதளம் மூலமாக 12 வயது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறுமியுடன் நட்பாக பேசி வந்த Prasad North Shields மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால் சிறுமி கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் என Prasad-க்கு தெரிந்திருக்கவில்லை.
இதனையடுத்து Prasad பற்றி குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளை தடுக்கும் குழுவின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி ரயில் நிலையத்துக்கு வந்த Prasad-ஐ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அப்போது, தன்னை விட்டுவிடும்படி Prasad கெஞ்சிய வீடியோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.