இந்த நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு பேரிடர் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 30-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி நடைபெற்றுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழை காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் 15 ஆயிரம் பேர் திண்டாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.