புரூஸ்லீயை போன்று சாகசம் செய்யும் 8 வயது சிறுவன்

ஜப்பானில் புரூஸ்லீயின் குட்டி ரசிகர் ஒருவர் அவரைப் போன்றே சாகசம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில்  தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஜப்பானில் வசிக்கும் 8 வயதே ஆன ரியுசெய் (Ryusei) எனும் சிறுவன், ப்ரூஸ் லீயின் வீடியோக்களைப் பார்த்து அவரது ரசிகரானவர்.

தமது 4-வது வயதில் புரூஸ்லீ போன்றே ஆக வேண்டும் என தமது தந்தையிடம் பயிற்சி பெற்ற அவர், 8 வயதில் குட்டி ப்ரூஸ் லீயைப் போன்றே மாறி வருகிறார்.

தினமும் அதிகாலை உடற் பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்துள்ள சிறுவன், புரூஸ்லீ போன்றே நன்சக்ஸ் (Nunchuks) பயன்படுத்தி வித்தை காட்டுகிறார்.அதோடு இந்த குட்டி புரூஸ்லீ  என்டர் த ட்ரேகன் படத்தின் பிரபலமான சண்டைக் காட்சியை அவ்வாறே செய்து அசத்துகிறாராம்.

 

 

குட்டி புரூஸ்லீசாகசம்ஜப்பான்நன்சக்ஸ்
Comments (0)
Add Comment